இடங்கணசாலை நகர தி. மு. க. செயற்குழுக் கூட்டம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள இடங்கணசாலை நகர தி.மு.க. செயற்குழு கூட்டம் நகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. நகர செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற 20-ந் தேதி முதல் அடுத்த மாதம் 20-ந் தேதி வரை கட்சியில் தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முதல்வர் வருகையையொட்டி மேட்டூருக்கு நாளை இடங்கணசாலை நகர பகுதியில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், துணைத் தலைவர் தளபதி மற்றும் கட்சி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி