பாக்கெட்டில் அடைத்து ரேஷன் பொருட்கள் விற்பனை

சேலம் சீரங்கபாளையத்தில் உள்ள ரேஷன் கடையில், ரேஷன் பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து, விற்பனை செய்யப்படுவது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக அரசு, ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் அடைத்து, ரேஷன் அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன் முன்னோட்டமாக, சேலம் சீரங்கபாளையத்தில் உள்ள சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக, ரேஷன் பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி