சேலம்: கார் மோதி ஓய்வு பெற்ற போலீஸ் எஸ். ஐ பலி

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 61). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி