தேவூர் அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்

சேலம் மாவட்டம் தேவூர் அருகே புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சியில் உள்ள மேல்புதூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வடக்குகாடு பஸ் நிறுத்தத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்திற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும், சாலை மறியல் செய்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நேற்று மேல்புதூர் கிராம பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகளுடன் குமாரபாளையம்-எடப்பாடி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி