எடப்பாடி அருகே சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் மெரம்புக்காடு பகுதி மக்கள், தங்கள் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு நிரந்தர வழிப்பாதை இல்லாததை கண்டித்து, இறந்த ஒருவரின் உடலை சாலையில் வைத்து 50க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கொங்கணாபுரம் காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி