மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்ககோரி மறியல்

ஆந்திராவில் வழங்கப்படும் உதவித் தொகையை போல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி