சேலம் மாவட்ட கால்நடை வளர்ப்பு சங்கத்தின் சார்பில் கொங்கணாபுரம் அருகே நேற்று கால்நடை திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் செவலை, காரி, மயிலை, காங்கேயம் உள்ளிட்ட பாரம்பரிய வகைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பசு மாடுகள், காளைகள் மற்றும் சேவல்களும் கலந்து கொண்டன. விலங்குகள் நல ஆர்வலர் பாலாஜி தொடங்கி வைத்த இக்கண்காட்சியில், நாட்டு இன பசுமாடுகள் மற்றும் காளைகள் ஆரோக்கியம், உடல் அமைப்பு, செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த மாடுகள் மற்றும் கோழிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.