சங்ககிரி அருகே சிறுமியை கடத்தி திருமணம்; வாலிபர் மீது போக்சோ

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த தறித்தொழிலாளி விக்னேஷ், 17 வயது சிறுமியை காதலித்து, கடந்த ஆண்டு நவம்பரில் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கோவில் திருமணம் செய்துள்ளார். பெற்றோர் ஏற்காததால் சிறுமியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய நல அலுவலர் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் குழந்தை திருமணம் செய்த விக்னேஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி