சேலம் எடப்பாடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பசுபதிராஜா, கடந்த மாதம் 28ஆம் தேதி 16 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் 18 வயது நிரம்பட்டும் என கூறியுள்ளனர். இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி பசுபதிராஜா சிறுமியிடம் திருமணம் செய்து கொண்டால் யாரும் பிரிக்க முடியாது எனக்கூறி முனியப்பன் கோவிலில் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் புகார் அளித்ததையடுத்து, பசுபதிராஜா மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சங்ககிரி மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.