சேலம்: கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபர்கள் கைது

சேலம் எடப்பாடி அருகே தேவூர் கத்தேரி ஊராட்சி வளையகாரனூர் தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி உட்கோட்ட டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் இரவு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் மகன்கள் பசந்சிங், கோதம் குமார் சிங் ஆகிய இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் வைத்திருந்த பையில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. பீகாரில் இருந்து ரயில் மற்றும் பஸ் மூலம் வந்த இருவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி