சேலம்: சமூகநீதி மாரத்தான்.. வெற்றி பெற்ற வீரர்களுக்கு எம். பி. பரிசு

தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் இடங்கணசாலை நகர தி.மு.க. சார்பில் சமூக நீதி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி காடையாம்பட்டி சந்தைப்பேட்டையில் நடைபெற்றது. போட்டியை சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம். செல்வகணபதி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, தர்மபுரி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். 

இதில் கோவையை சேர்ந்த குழுவினர் முதல் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ரூ. 8 லட்சம் பரிசு மற்றும் சுழற்கோப்பையை டி.எம். செல்வகணபதி எம்.பி. வழங்கினார். முன்னதாக இடங்கணசாலை நகர தி.மு.க. சார்பில் ரத்ததான முகாம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, மூத்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி