எடப்பாடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

தேவூர் அருகே காவேரிப்பட்டி பகுதியை சேர்ந்த யுவராஜ் (32) என்பவர் தேவூரில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அண்ணமார்கோவில் அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி இருவரும் காயமடைந்தனர். தேவூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி