இந்நிலையில் குணசேகரன் ஓசூர் பகுதியில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக சமீபத்தில் குடும்பத்துடன் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச்சென்றனர். நேற்று வீடு திரும்பிய குணசேகரன் வீட்டின் பிரதான கதவு மற்றும் உள்பகுதியில் உள்ள பெட்டிகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடப்பாடி போலீசார் அங்கு பதிவாகி இருந்த திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்து, தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எவ்வளவு நகைகள் திருட்டு போனது என்ற விவரம் சரிவர தெரியவில்லை என்றும் முழுமையான விசாரணைக்கு பிறகே எவ்வளவு நகை திருட்டு போனது என தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.