மகுடஞ்சாவடி: லாரி மீது டூ வீலர் மோதி வாலிபர் பலி

சேலம் மல்லமூப்பம்பட்டியைச் சேர்ந்த ஐடி ஊழியர் பிரவீன்குமார் (25), மே 29 அன்று கோயம்புத்தூரிலிருந்து சேலத்திற்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். மகுடஞ்சாவடி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பைக் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி