எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார துறை அமைச்சர் ஆய்வு

தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நேற்று சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான தனிப்பிரிவு, சமையல் கூடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மருந்துகள் கையிருப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்த அவர், சி.டி. ஸ்கேன் வசதி இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுவதை அறிந்ததும், எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைவில் சி.டி. ஸ்கேன் வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி