எடப்பாடி ஆடையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஆசிரியர் தங்கராஜ் (55) நேற்று பள்ளி வளாகத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தட்டி கேட்டபோது, அவர்களை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இது குறித்து பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தங்கராஜை பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கைது செய்தனர்.