சேலத்தில் நாளை (பிப்ரவரி 13) நடைபெறும் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பரப்புரை நிகழ்ச்சியில், நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு பெறாத தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வருவதை தவிர்க்குமாறு தவெக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.