காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தனியார் ஏஜென்சிகள் மூலம் செயல்படுத்த வேண்டும், 23 ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு கலாமுறை ஊதியம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும், உடையும் பாட்டில்களுக்கு நிர்வாகமே இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் போராட்டம் தொடங்கியுள்ளனர். இதனால் சேலத்தில் 184 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. ஊழியர்கள் குடோன் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மது கிடைக்காமல் மது பிரியர்கள் அவதிக்குள்ளாகினர்.