சேலம்: டூவீலர் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் படுகாயம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னநாச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஜெகதீஷ் (வயது 19). அதே பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் விக்னேஷ் (19). நண்பர்களான இவர்கள் இருவரும் லாரி பட்டறையில் பெயிண்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோடு சென்று விட்டு வீடு திரும்பி வந்தனர். எடப்பாடி அடுத்த வீரப்பம்பாளையம் புறவழிச்சாலை பிரிவு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

இதனால் போலீசாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த விக்னேஷ் எதிர்திசையில் வாகனங்கள் வரும் பாதையில் ஓட்டிச் சென்றார். அப்போது எதிரே சங்ககிரி நோக்கி வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட இருவாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம், எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து எடப்பாடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி