அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், நீர்மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நகர மன்ற எதிர்க்கட்சி தலைவர் ஏ.எம். முருகன், தங்காயூர் ராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர் பழனிசாமி, ரவி, சண்முகம் உள்ளிட்ட திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து எடப்பாடி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை பயணிகள் ஓய்வு மாளிகைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு நகர, ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து எடப்பாடி நகர பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.