தொடர்ந்து நஞ்சுண்டேஸ்வரர்- தேவகிரி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணியர் மற்றும் நஞ்சுண்டேஸ்வரர்-தேவகிரி அம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர்.
இதில் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம். செல்வகணபதி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தேர்கள் எடப்பாடி அங்காளம்மன் கோவில் தெருவில் நிலை நிறுத்தப்பட்டது. திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.