சேலம்: பஸ் டிரைவர் திடீர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சித்தூர் அருகே நாச்சூரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (எ) பெரமன் (47). டிரைவராக இவர் எடப்பாடி இருந்து சேலம் செல்லும் விஜயலட்சுமி தனியார் பஸ்சில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை சேலத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு எடப்பாடி நோக்கி தனியார் பஸ்சை செல்வம் ஓட்டி வந்துள்ளார். அப்போது காக்காபாளையம் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் சர்வீஸ் ரோட்டில் சென்ற சிறிது தூரத்திலேயே டிரைவர் செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். 

இதனால் சர்வீஸ் ரோட்டில் இருந்து மெயின் ரோட்டு ஓரமாக மரத்தின் மீது பஸ் மோதி நின்றுள்ளது. இதில் பஸ்சின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்தது. உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் மயக்கம் அடைந்த டிரைவர் செல்வத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியானூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி டிரைவர் செல்வம் உயிரிழந்தார். டிரைவர் செல்வம் பணியின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி