சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் அருகே தி. மு. க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் டி. எம். செல்வகணபதி எம். பி. கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, நீர்மோர், நுங்கு, குளிர்பானம் உள்ளிட்டவற்றை வழங்கினார். முன்னதாக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ரத்ததான முகாமை அவர் தொடங்கி வைத்தார். முகாமில் தி. மு. க. வினர் 72 பேர் ரத்ததானம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.