சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி பகுதிகளில் தலா ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிளை நூலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி அமைக்க 19 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் காட்டினர். இந்த நிலத்தையும் அவர் பார்வையிட்டார். ஆய்வின்போது பேரூராட்சி தலைவர் காவேரி, செயல் அலுவலர் தம்பிதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.