சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எடப்பாடி அடுத்த நைனாம்பட்டி பகுதியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் டி. எம். செல்வகணபதி எம்.பி., நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பார்க்காதவை என்றும், டிஜிட்டல் முறையில் சதி செய்து திமுக வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். 35 ஆயிரம் சோசியல் மீடியா குழுக்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 2 கோடி பேரை தொடர்பு கொண்டு, மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றிவிட்டதாக அவர் கூறினார். இதனால் திமுக தொண்டர்கள் தாங்கள் எதையோ இழந்து விட்டோம் என்று நினைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.