ஜலகண்டாபுரத்தில் ரூ. 35 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனை

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க உப கிளையில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 602 மூட்டை கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். முதல் தர கொப்பரை தேங்காய் கிலோ ரூ.110.70 முதல் ரூ.130.70 வரையிலும், இரண்டாம் தர கொப்பரை தேங்காய் கிலோ ரூ.70.70 முதல் ரூ.109 வரையிலும் விலை போனது. மொத்தம் 33,531 கிலோ கொப்பரை தேங்காய் ரூ.35 லட்சத்து 57 ஆயிரத்துக்கு விற்பனையானது.

தொடர்புடைய செய்தி