அந்தியூர், தர்மபுரி, பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய் ஏலத்திற்கு கொண்டு வருவார்கள். கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொப்பரை தேங்காய் வரத்து மிகவும் அதிகமாக இருந்தது. கடந்த வாரம் 195 மூட்டைகள் ரூ. 10.96 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த வாரத்தில் கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்தது. 340 மூட்டை கொப்பரை தேங்காய் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் முதல் தரம் ஒரு கிலோ ரூ. 123.10 முதல் ரூ. 144 வரை ஏலம் போனது. இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ. 80.10 முதல் ரூ 122 வரை ஏலம் போனது. நேற்று 340 மூட்டை கொப்பரை தேங்காய் ரூ. 20 லட்சத்து 36 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
"திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்".. பிரதமர் மோடி