ஜலகண்டாபுரத்தில் ரூ. 17/4 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

ஜலகண்டாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரை தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டன. முதல் தர கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 138.95 முதல் ரூ. 190.10 வரையிலும், இரண்டாம் தர கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 80.10 முதல் ரூ. 119.95 வரையிலும் விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தம் ரூ. 17.78 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி