எடப்பாடி நகராட்சி சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியில் சர்ச்சை

எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட அங்காளம்மன் கோவில் தெருவில் நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு தனியார் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நேற்று ஒன்று திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். நகராட்சி தலைவர் டி.எஸ்.எம். பாஷா மற்றும் அதிகாரிகள் விரைவில் பணி முழு அளவில் நடைபெறும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி