சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அர்த்தனாரி, மல்லிகரை பேருந்து நிலையப் பகுதியில் உள்ள டீக்கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார். மேலும், பொதுமக்களுடன் அமர்ந்து டீ அருந்தி, ஐந்து ஆண்டு கால சாதனைகளை விளக்கி, கூட்டணி கட்சி தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.