எடப்பாடி அருகே அரசிராமணி பேரூராட்சி குள்ளம்பட்டியில் உள்ள சமுதாயக் கூடத்தில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் காவேரி தலைமை தாங்கி விழாவைத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் 85 கர்ப்பிணிகளுக்கு புடவை, வளையல், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், கர்ப்பிணிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஐந்து வகையான உணவு பரிமாறப்பட்டது.