ஜலகண்டாபுரத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்ற கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்தில், மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 231 மூட்டைகளைக் கொண்டு வந்தனர். முதல் தர கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 111.00 முதல் ரூ. 176.60 வரையிலும், இரண்டாம் தர கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 66 முதல் ரூ. 95.10 வரையிலும் விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தம் ரூ. 12.58 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.