எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில், எடப்பாடியாரின் தேர்தல் பரப்புரை உழைப்பை யாரும் மறுக்கவில்ல. ஆனால் கூட்டணி, தேர்தல் செயல்பாடுகள் குறித்து தன்னிச்சையாக செயல்பட்டார். தோல்விக்குப் பிறகு தலைமை இறங்கி வந்து பேச முன்வந்திருக்க வேண்டும் என்றும், 'நான் மட்டுமே எல்லாம்' என்ற நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது. இப்போதும் அழைத்தால் பேச தயார். கழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்போம். 'போங்க போங்க' என்று விரட்டாமல் 'வாங்க வாங்க' என்று அழைத்தால் எல்லாம் மாறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.