இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் குழந்தைகளை விரட்டி கடிக்கும் நாய்களை வீட்டில் கட்டிப் போட்டு வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர். ஆனாலும் அந்த நாய்களை கட்டிப் போட்டு வளர்க்காததால் அந்த வீதியில் செல்லும் குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்து துன்புறுத்தியுள்ளது.
இதனைத் தடுக்க முயன்ற ஆறுமுகம் என்பவரை நாய்க்குச் சொந்தக்காரர்கள் தாக்கியதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட ஆறுமுகம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இது குறித்து எடப்பாடி காவல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.