பூலாம்பட்டியில் படகுப் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆறு செல்கிறது. மக்கள் நலன்கருதி நெரிஞ்சிப்பேட்டைக்கும், பூலாம்பட்டிக்கும் இடையே படகு போக்குவரத்து உள்ளது. மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் நேற்று முன்தினம் தொடங்கிய படகு போக்குவரத்து தொடங்கியது. தற்போது அணையில் இருந்து 40 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மீண்டும் 2-வது முறையாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி