சேலம் மாவட்டம் அரசிராமணி செட்டிபட்டி மாரியம்மன் கோவில் முன்பு தேவூர் வருவாய் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், எடப்பாடி-குமாரபாளையம் சாலையில் செட்டிப்பட்டி பகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்று, வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.