எடப்பாடி அருகே அடுத்தடுத்த மூன்று வீடுகளில் துணிகர கொள்ளை

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே பூலாம்பட்டி ஸ்டீல் பிளாண்ட் எதிரே வசித்து வருபவர் தங்கவேல் மகன் மாதேஷ். நேற்று காலை வழக்கம் போல் மாதேஷ் மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். மதியம் வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது உள்ளே வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரம் காணவில்லை. இதே போல் ஸ்டீல் பிளாண்ட் எதிரே வசித்து வரும் அய்யண்ணன் மகன் சௌந்தரராஜன் மற்றும் அவரது மனைவி ராசாத்தி ஆகியோர் நேற்று வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர். 

மதியம் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ. 3500 பணம் காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்தவர் பூமாலை என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் 1/2 பவுன் நகை மற்றும் ரூ. 6000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்ககிரி டிஎஸ்பி சிந்து, பூலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி