எடப்பாடி அருகே ஒட்டப்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி, ஆனந்தாயி அம்மன் கோவிலில் பிரம்ம உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் அம்மன் அழைப்பு, முத்து ரத பவனி, அம்மன் திருவீதி உலா, பால்குட ஊர்வலம், தீ மிதித்தல் மற்றும் மயான கொள்ளை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. சிறுதானியங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் செங்கான் குளத்தில் நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் அங்காள பரமேஸ்வரி ஆனந்தாயி அம்மன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அவரை விதைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.