ஜலகண்டாபுரத்தில் ரூ. 33. 57 லட்சத்துக்கு ஏலம் போன கொப்பரை

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் உப கிளை ஜலகண்டாபுரத்தில் நேற்று நடைபெற்ற கொப்பரை தேங்காய் ஏலத்தில், மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த 26 டன் 342 கிலோ கொப்பரை தேங்காய், ரூ. 33.57 லட்சத்துக்கு ஏலம் போனது. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடைபெறும் இந்த ஏலத்திற்கு 533 மூட்டைகளில் கொப்பரை கொண்டு வரப்பட்டது.

தொடர்புடைய செய்தி