சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றதால் 3 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதேபோல், பக்கநாடு கிராமத்தில் விவசாயி மாதையனின் தோட்டத்திலும் மர்ம விலங்கு தாக்கி 3 ஆடுகள் இறந்தன. இந்த சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மர்ம விலங்கின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.