இதனையடுத்து வீட்டில் இருந்த ராஜாவின் தாய் சாந்தி, பேத்தி கவிதாவை காலை 10 மணிக்கு வினோபாஜி நகரில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். வழக்கமாக சிறுமி அங்கன்வாடிக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலை 3.30 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவார்.
ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் சிறுமி கவிதா வீட்டிற்கு வரவில்லை. இதனால் சாந்தி மற்றும் உறவினர்கள் அங்கன்வாடி மையத்திற்கு சென்று விசாரித்தபோது கவிதா அங்கன்வாடி மையத்திற்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சாந்தி தனது மகன் ராஜாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா அக்கம் பக்கத்தில் தேடியும் மகள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தேவூர் போலீஸ் நிலையத்தில் ராஜா புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வருகின்றனர். மேலும், சிறுமி எங்கு சென்றார்? அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.