கருப்பூர் அருகே பணம், செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது

சேலம் கருப்பூர் சாமி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மெய்யழகன் மற்றும் தனுஷ் ஆகியோர் அவரது வீட்டில் இருந்த செல்போன் மற்றும் ரூ. 10,500 பணத்தைத் திருடிச் சென்றனர். இது குறித்து லட்சுமி கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மெய்யழகன் மற்றும் தனசேகர் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி