வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு குண்டலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் யோகா இவரது மகள் சஜிதா குமாரி, சேலம் மின்னாம்பள்ளி அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று விடுதியில் இருந்து வெளியே சென்ற அவர் வெகு நேரம் ஆகியும் வரவில்லை. இதையடுத்து சஜிதா குமாரியை பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து காரிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.இதேபோல் சேலம் பெரிய புத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி ருத்ரா தேவி இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கோவிந்தராஜ் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ருத்ராதேவி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. ருத்ரா தேவியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கோவிந்தராஜ் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.