சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பழைய எடப்பாடி ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபு என்கிற கட்டப்பிரபு மற்றும் ஆதித்யா ஆகியோர் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். எடப்பாடி, குமாரபாளையம், நாமக்கல் காவல் எல்லைகளில் வழிப்பறியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த இருவரையும் எடப்பாடி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.