சேலம்: ரயிலில் கிடந்த பையில் 10கிலோ கஞ்சா பறிமுதல்

ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை தன்பாத் - ஆழப்புழா விரைவு வண்டியில் பொம்மிடி- சேலம் ரயில் நிலையங்களுக்கு இடையே சோதனை நடத்தியபோது, பின்பக்க பொதுப் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த இரண்டு சோல்டர் பேக்குகளில் சுமார் 10 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி