சேலத்தில் தகாத உறவால் நடந்த சம்பவம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கலரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் மாயகிருஷ்ணன். இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. இந்நிலையில் துக்கியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இரு நாட்களுக்கு முன் மாயகிருஷ்ணன் மற்றும் இளம் பெண் மாயமானதாக இளம்பெண்ணின் தந்தை வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து இளம் பெண்ணின் உறவினர்கள் மாயகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது வீட்டை அடித்து உடைத்து வீட்டில் இருந்த 13 பவுன் நகை மற்றும் 47 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றதாகவும் வேல்முருகன் மல்லியகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி