சேலம் மாவட்டம் ஆத்தூரில் தொழில் பிரச்சனை காரணமாக ரூபாய் 10 லட்சம் கேட்டு வங்கி அலுவலக உதவியாளரின் மகன் தீபேஷ் கடத்தப்பட்டார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆத்தூர் நகர தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு மூன்று மணி நேரத்திற்குள் இளைஞரை பத்திரமாக மீட்டனர். தற்போது இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.