வாழப்பாடி அருகே விளாரி பாலம் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் சின்னசேலம் பகுதியில் விவசாயப் பணிக்காகச் சென்றுவிட்டு, பிக்அப் வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் ஆத்தூர் அருகே அழகாபுரம் பகுதியில் வந்தபோது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கூலித் தொழிலாளி செம்மலை என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.