தலைவாசல்: சிறுமி கர்ப்பமான வழக்கில் தொழிலாளி கைது

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கட்டிடத் தொழிலாளியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் 2025 டிசம்பரில் கர்ப்பமானார். இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் மகளிர் போலீசார் ஏற்கனவே இரு சிறுவர்களைக் கைது செய்திருந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கருப்பண்ணனை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கள்ள உறவு விவகாரத்தில் கொலை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி