சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆனையம்பட்டி புதூர் பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் முறையாக வழங்கப்படாததால், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தொடாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் நேரில் வராததால், பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாத நிலையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.